அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
நாள்: ஆகஸ்ட் 16, 2012, வியாழக்கிழமை


நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: இடிந்தகரை புனித லூர்து மாதா ஆலயத் திடல்

கூடங்குளம் அணு உலைகளைப் பற்றிய எந்தத் தகவல்களையும் பொது மக்களுக்குத் தராது,
நீதிமன்ற ஆணைக்குப் பிறகும், திட்டம் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை மக்கள் மத்தியில் வெளியிடாது,
மக்கள் கருத்துக்களை, அச்சங்களை, உணர்வுகளை எந்த விதத்திலும் கேட்காது,
அணுஉலை விபத்து இழப்பீடு பற்றிய ரஷ்யா உடனான ஒப்பந்தத்தை மக்களிடம் காண்பிக்காது,
அபாயகரமான திரவக் கழிவுகளை நம் கடலில் விட்டு, நம் மீன் உணவை நச்சாக்கி,
நாற்பத்தெட்டாயிரம் ஆண்டுகள் நம்மைத் துன்புறுத்தும் திடக் கழிவுகளை நம் மண்ணில் புதைத்து வைக்க சதி செய்து,
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து கொண்டிருக்கும்போதே, நீதிமன்றத்தை அவமதித்து திட்டம் துவங்குவதற்கு நாள் குறித்துக்கொண்டு,
முதலிரண்டு அணு உலைகளே வேண்டாம் என்று சொல்லும்போது, மூன்றும், நான்கும் விரைவில் வரும் என்றெல்லாம் பொய்யும் புரட்டும் பேசி மக்களை அவமதித்து,
தமிழ் மக்கள் உரிமைகளை, உணர்வுகளை முற்றிலும் புறந்தள்ளி, நம்மவர் நலத்தைப் பற்றிக் கவலைப்படாது, ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்சு நாட்டு கம்பெனிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதில் கவனமாய் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் நடத்தும் மக்கள் விரோத மத்திய அரசை எதிர்த்து,
இந்த தமிழர் விரோத அரசுக்குத் துணைபோகும் தமிழக அரசை கண்டித்து....

கடலோர மக்களும், கரையோர மக்களும், உள்ளூர் மக்களும் சாதி மதங்களைக் கடந்து, ஒன்றாய் திரண்டு, ஒரு தாய் பிள்ளைகளாய், ஓராண்டு காலம் நடத்துகிற உண்மைப் போராட்டத்தின் முதலாண்டு நிறைவுப் போராட்டம்!

தலைவர்கள் வைகோ, சீமான், ஜவாஹிருல்லா, வேல்முருகன், மகேந்திரன், கொளத்தூர் மணி, அதியமான் உட்பட பல அரசியல், சமூகத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கூடங்குளம் அணு உலைகளை உடனடியாக மூடிட உற்சாகமாய் திரண்டு வாரீர்!

இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் போராடுவோம்!
எங்கள் தலைமுறைகளைக் கொன்று எங்கோ இருப்பவனுக்கு ஊழியம் செய்திட ஒருநாளும் அனுமதியோம்!!
எங்களைப் புறந்தள்ளி இங்கே ஆட்சி அதிகாரம் செய்திட இனிமேல் விடமாட்டோம்!!!

                                              அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
                                              இடிந்தகரை 627 104