புதுச்சேரி மீனவர்கள் வேலைநிறுத்தம்


கூடங்குளத்தில் மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி மீனவர்கள் வேலைநிறுத்தம்

              கூடங்குளத்தில் மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் உள்ள சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு 16 மீனவ கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டாகஅழைப்பு விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் சுமார் 2 ஆயிரம் விசைப் படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மேலும், புதுச்சேரி முழுவதும் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் மீன் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

                                                                                             தேனி.K.ராஜா