டீசல் விலை உயர்வு மற்றும் கூடங்குளம் தாக்குதலை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்

    டீசல் விலை உயர்வு மற்றும் கூடங்குளத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களை கண்டித்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று தொடங்கிய இந்த போராட்டம், 2 நாட்கள் நடைபெறுகிறது.
மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 500 விசைப்படகுகள், 1500க்கும் அதிகமான பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களும் நேற்று மதியமே கரை திரும்பினர்.
காரைக்கால் மாவட்டத்திலுள்ள 11 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலைச் சார்ந்தோர் என மொத்தம் 25ஆயிரம் பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கூடங்குளத்தில் தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-பசுமைநாயகன்