நாங்குனேரியில் 650 கிலோ வெடிபொருள் பறிமுதல்

        நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 650 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான்குநேரி நான்குவழிச் சாலை தெற்கு மேம்பாலம் அருகே, நேற்றுமாலை கார் ஒன்று  விபத்துக்குள்ளானது.
வெகுநேரமாகியும் அந்த காரை மீட்க யாரும் வரவில்லை. இதையடுத்து, நான்குநேரி காவல்துறைத் துணை ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான குழு, அந்த காரில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது  அதில் 13 மூட்டைகளில் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து இருந்தது தெரியவந்தது.
வெடிமருந்து குறித்தும், எதற்காக நெல்லை கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் நான்குநேரி  காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், காரை ஓட்டிய நபர் யார் என்பது பற்றியும், கார் உரிமையாளர் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-பசுமை நாயகன்