கூடங்குளம் போராட்டம் தொடர்பாக கைதான 63 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது

   கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 63 பேருக்கு சென்னை உயர் நிதீமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் கூடங்குளம் அணுசக்தி எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது 3 பெண்கள் உட்பட 66 பேரை திருநெல்வேலி போலீசார் கைது செய்து வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அரசு சொத்துகளை சேதப்படுத்தியது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியது உள்ளிட்டவை தொடர்பாக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் தரப்பில் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மதிவாணன் 63 பேருக்கு ஜாமின் வழங்கினார்.
இதில் 3 பெண்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதால் அவர்களின் ஜாமின் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.                                                                    

                                                                                                    -பசுமை நாயகன்.