ரஷ்ய அதிபரை முற்றுகையிடுவோம்

       கூடங்குளம் அணு உலை திட்டத்தை கைவிடாவிட்டால், டெல்லி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை முற்றுகையிடுவோம் என தூத்துக்குடி மீனவர்கள்  
அறிவித்துள்ளனர்.கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், அணு உலை பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அணு உலைக்கு எதிரான இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரையிலான கடலோர கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
இதேபோன்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 கிராம மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.